ஒன்லைனில் போன் மூலம் செய்யப்படும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அண்மைய ஆய்வில் 66% பேர் தங்களுக்கு தினமும் குறைந்தது 3 spam அழைப்புகள் (சந்தேகப்படும் படியாக) வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், Google இந்த மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜெமினி நனோ AI மூலம் spam வகையான அழைப்புகளை ரியல்-டைமில் கண்டறிந்து அதனை உடனடியாக எச்சரிக்கிறது.
இந்த வசதி குறிப்பாக Android பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஜெமினி நானோ AI மூலம் ‘spam Detection Alerts’ என்ற பெயரில் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் தொலைபேசியில் மற்றவரிடம் பேசும் போது, கூகுள் உங்கள் உரையாடலை கவனித்து கீவேர்ட்களாக சேகரிக்கும். சந்தேகப்படும் படியான வார்த்தைகள் இருந்தால் கூகுள் அது தொடர்பாக அலர்ட் அனுப்பும்.
(Bank Representative) என்ற பெயரில் யாராவது உங்களை தொடர்பு கொண்டு பேசினால், அவர்கள் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அதாவது கார்ட் எண், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் பற்றிப் பேசினால், Google தானாகவே பயனருக்கு எச்சரிக்கையை அனுப்பும். இது spam அழைப்பாக இருக்கலாம் என்று மெசேஜ் அனுப்பிவிடும். இதன்முலம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.