இந்திய உணவுகளில் பரோட்டாவிற்கு தனித்துவமான இடம் காணப்படுகின்றது. பலருக்கும் பிடித்தமான இந்த சுவைமிகுந்த பரோட்டாவை காலை, மதியம், இரவு என எப்போது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.
ஆனால் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்று ஒட்டுமொத்த சமையல் உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளது.
நாம் விரும்பிச் சாப்பிடும் பரோட்டாவை , வித்தியாசமான முறையில் செய்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளார் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்.
வழக்கமாக பரோட்டா செய்வதற்கு பயன்படுத்தப்படும் நெய் அல்லது வெண்ணெய்க்குப் பதிலாக, பார்ப்பதற்கு டீசல் நிறத்திலிருக்கும் ஒருவிதமான எண்ணெய் ஒன்றை குறித்த நபர் பயன்படுத்தியிருக்கின்றார்.
வைரலான குறித்த காணொளியில்,வாடிக்கையாளர் ஒருவர் ஆர்வமிகுதியில் “நீங்கள் பரோட்டாவிற்குப் பயன்படுத்துவது என்ன வகையான எண்ணெய்” எனக் கேட்க, அதற்கு சமையல் செய்பவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் அமைதியான முறையில் இது டீசல் வகையான ஒரு எண்ணெய். இதன் பெயர் தான் டீசல் பரோட்டா எனக் கூறியிருக்கின்றார்.
பலதடவை பயன்படுத்திய எண்ணெய்யை சேகரித்து,அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதன் காரணமாகவே டீசல் நிறத்தில் இந்த எண்ணெய் காணப்படுவதாகவும், இது உடல் நலத்திற்கு தீங்கானது என்றும் பலர் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.