இந்தத் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஒரு வீட்டில் வசிக்கும் இருவருக்கு இடையே நடக்கும் பார்க்கிங் பிரச்சினையைப் பற்றிய சுவாரசியமான சம்பவங்களை இந்தத் திரைப்படம் பிரதிபலித்தது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் ஒஸ்கார் நூலக அமைப்பு, 'பார்க்கிங்' திரைப்படக் கதையை தங்களது நூலகத்தில் இப்பொழுது இணைத்துள்ளது.
உலக அளவில் சிறந்த திரைக்கதையோ, அல்லது சிறந்த காட்சி அமைப்போ மக்களை அதிகம் ஈர்க்கும் பட்சத்தில் அமைந்திருந்தால், அதனைக் காலம் கடந்து பாதுகாக்கும் நோக்கில் ஒஸ்கார் நிறுவனம் அதனைத் தங்கள் நூலகத்தில் பாதுகாத்து வைப்பது வழக்கமான ஒன்று. அந்தவகையிலேயே 'பார்க்கிங்' திரைப்படக்கதை தற்போது இடம்பிடித்திருக்கிறது.
இதேவேளை நடிகர் ஹரிஷ் கல்யாண், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த மகிழ்வான விடயத்தைப் பகிர்ந்து, "ஒரு நல்ல கதை அதற்கான இடத்தைத் தானே தேடிப்போகும்" என்று பதிவிட்டுள்ளார்.