இந்தியாவின் பல நகரங்களில் தற்போது வெப்பமான காலநிலை நிலவி வரும் நிலையில்,இந்த வருடம் அதிகூடிய வெப்பநிலையாக 46 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வெப்பம் குறையாத நிலையில், சில மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
இருப்பினும் ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன் , அங்கு 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த வெயிலில் இந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர் ஒருவர் பாலைவனம் போன்று காணப்படுகின்ற மண்ணில் சிறிது நேரம் புதைத்து வைக்கப்பட்ட அப்பளம், எவ்வாறு நொறுங்கிறது என்பதைக் காட்டும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தக் காணொளியினை பார்வையிட்டுள்ள அசாம் மாநில முதல்வர், “ராஜஸ்தானின் பாலைவனம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் இராணுவ வீரர்களுக்கு மரியாதையும், நன்றியும் கூற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.