பெரும்பாலான பெண்களுக்கு சரும அழகைப் பாதிக்கும் வகையில் பலவிதமான பிரச்சினைகள் தோன்றும்.
குறிப்பாக கரும்புள்ளிகள் முக அழகை அதிகளவில் பாதிக்கின்றன. முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதற்கு பல காரணங்கள்இருக்கலாம்.
சில சமயங்களில் மன அழுத்தம், அதிக வேலைப்பளு போன்ற காரணங்களால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, கரும்புள்ளிகள்தோன்றக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டிலேயே சில வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் சருமத்தில் உள்ளகரும்புள்ளிகளைக் குறைக்கலாம்.
தோடம்பழத் தோலை நன்கு காயவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்பு தேனுடன் கலந்து இதனை மென்மையானபேஸ்ட்டாக உருவாக்கவும். இந்தப் பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் காய வைத்த பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.
உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயுடன் சிறிது கோப்பித்தூள் சேர்த்து, சருமத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி, இரவுமுழுவதும் வைத்திருந்த பின், காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கடலை மா, எலுமிச்சைச் சாறு, பன்னீர் ஆகியவற்றை பேஸ்ட் பதத்திற்குக் கலந்து, சருமத்தில் கரும்புள்ளிகள் உள்ளஇடங்களில் தடவி, நன்கு காய்ந்ததும் கழுவ வேண்டும். இது கரும்புள்ளிகளை முற்றாக நீக்கி சருமத்தைப் பாதுகாக்கின்றது.
வெள்ளரிக்காய்ச் சாற்றுடன் எலுமிச்சைச் சாறு,அரைத் தேக்கரண்டி தேன் என்பவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்.பின்பு சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரால் கழுவி வர சருமம் மென்மையாகவும்பளபளப்பாகவும் காணப்படும்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளை வாரத்திற்கு மூன்று முறை பின்பற்றி, சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வோம்.