இந்த நூடுல்ஸ் எமது உடலில் எவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பெரும்பாலும் கோதுமை மாவினால் செய்யப்படும் நூடுல்ஸ், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவாகவும்,அதிகளவு சோடியம் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
ஆகவே இது ஆரோக்கியத்திற்கு தீங்குவிளைவிக்கின்ற அதேநேரம் எந்தவிதமான சத்துமற்ற உணவு எனச் சொல்லலாம்.
நூடுல்ஸில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு உள்ளதால் உடல்எடை அதிகரிப்பிற்கு வழிவகுப்பதுடன், விரைவில் செரிமானமாகி பசியை அதிகரிக்கவும் செய்கின்றது.
நூடுல்ஸ் கெட்ட கொழுப்பை அதிகரிக்கவும் நல்ல கொழுப்பை குறைக்கவும் செய்வதால் இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன.
நூடுல்ஸில் உள்ள அதிக கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயினை ஏற்படுத்துவதுடன், இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை விரைவாக அதிகரிக்கின்றது.
அத்தோடு நூடுல்ஸில் இருக்கும் அதிக கொழுப்பு செரிமானப் பிரச்சினையை ஏற்படுத்தி மலச்சிக்கலுக்கு வழிவகுக்கின்றது.
ஆகவே நீங்கள் நூடுல்ஸினை விரும்பி உண்பவராக இருந்தால் நூடுல்ஸினை அடிக்கடி உண்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.