Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்பட First look வெளியானது!

SooriyanFM Gossip - கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்பட First look வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

399 Views
நடிகர் கார்த்தி, தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்துகொண்டிருக்கின்றார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பினால் தனக்கென தனி இரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், நல்ல திரைக்கதைகளைத் தெரிவு  செய்து நடித்து வருபவர். ஆனால், இவர் நடித்த இவரது 25 ஆவது திரைப்படமான 'ஜப்பான்' எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை.

நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இரசிகர்கள் குறித்த அப்டேட்களுக்காக மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
 
இந்நிலையில் 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' திரைப்படத்தின் First Look வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தில், நடிகை கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதேவேளை கார்த்தியின் பிறந்தநாளான நேற்றைய தினம் ’வா வாத்தியார்' திரைப்படத்தின் Title அறிவிப்பு poster வெளியாகியுள்ளது.

குறித்த போஸ்டரில் “வாத்தியார்” என்று மக்களால் கொண்டாடப்பட்ட, மறைந்த நடிகர் எம்ஜிஆரின் வெவ்வேறு கெட்டப்புகள் கொண்ட உருவப் படங்கள் உள்ளது. அத்துடன், இந்தப் போஸ்டரில் நடிகர் கார்த்தி ஒரு காவல்துறை அதிகாரியாகத் தென்படுகின்றார். படத்தின் தலைப்பையும், குறித்த போஸ்டரையும் பார்க்கும் போது, இத்திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, எம்ஜிஆரின் தீவிர இரசிகனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரசிகர்கள் மத்தியில்,தற்போது இந்த First Look போஸ்டர்,பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top