Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
மணமணக்கும் தக்காளி ரசம் செய்வது எப்படி?

SooriyanFM Gossip - மணமணக்கும் தக்காளி ரசம் செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

345 Views

அனைத்து வயதுப் பிரிவினரும், எப்போதுமே வெறுக்காத ஒரு உணவாக இருப்பது தக்காளி ரசம் மட்டுமே.நமக்கு சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் இருந்தால்,அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே மருந்து தான் இந்தத் தக்காளி ரசம்.


பொதுவாக நமது வீடுகளில்,அசைவ உணவுகள் சமைக்காத நேரத்தில் கட்டாயமாக இந்தத் தக்காளி ரசத்தைத் தயாரிப்பார்கள்.அதுமட்டுமல்லாமல், பொதுவாக திருமண வீடுகளில் தக்காளி ரசமானது கட்டாய உணவாக இருக்கும்.

தக்காளி ரசம் வைப்பதொன்றும் அவ்வளவு பெரிய கடினமான விடயமுமல்ல.மிக நீண்ட சமையல் செய்முறையுமல்ல.மிக இலகுவாக வெறும் ஐந்து நிமிடத்திலேயே தக்காளி ரசத்தை எங்களால் தயாரிக்க முடியும்.

இதுவரைக்கும் உங்களுக்கு தக்காளி ரசம் வைக்கத் தெரியாது என்றால் உடனே இந்தப்பதிவைப்பார்த்து, ஒரு முறை வீட்டில் தக்காளி ரசத்தை சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுத்து அசத்திடுங்கள்!

தக்காளி ரசம் செய்யத்தேவையான பொருட்கள்

புளி – எலுமிச்சை அளவு

பழுத்த தக்காளி – மூன்று

மிளகு – ஒரு தேக்கரண்டி

சீரகம் – ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி – அரைத் தேக்கரண்டி

துவரம் பருப்பு – ஒரு தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 2

கறிவேப்பிலை – 2 கொத்து

கொத்தமல்லித் தழை – ஒரு கைபிடி அளவு

பூண்டு – 10 பற்கள்

மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி

பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு


முதலில் அடுப்பில் ஒரு வாணலியில் துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஒன்று, சீரகம், கொத்தமல்லி , மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக சூடு ஏற வறுத்து, அதனைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வறுக்கும் போது எப்போதும் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.அதாவது அளவுக்கதிகமாக வறுத்து விட்டால் ரசத்தின் வாசனை மாறிவிடும்.

நாம் வறுத்து வைத்த பொருட்களுடன் பூண்டுப் பற்களை சேர்த்து நன்கு அரைத்து,இந்த விழுதைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியை ஊற வைத்துக் கரைத்து வைத்து, இதனுடன் தக்காளிப் பழங்களை நன்கு கைகளால் சாறு இறங்கப் பிசைந்து கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாகியதும்,அதில் அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து லேசாக வறுத்து அதில் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக்கவும்.அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,புளி மற்றும் தக்காளிப்பழக் கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும்.

இப்போது,ரசத்தில் நுரை பொங்கி வரும் போது,தேவையான அளவிற்கு உப்புச் சேர்த்து,அதனுடன் கறிவேப்பிலை ஒரு கொத்து,கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கினால் வீடே கமகமக்கும் தக்காளி ரசம் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top