நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் "THE GOAT" திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இத்திரைப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சௌத்ரி, அஜ்மல் மற்றும் இன்னும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
"THE GOAT" திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக போஸ்டர் ஒன்றை திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது X தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய முதலாவது பாடலான விசில்போடு பாடல் அண்மையில் வெளியாகி பல கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,இன்னுமொரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது "THE GOAT திரைப்படத்தில் நடிகர் விஜய் 2 பாடல்களைப் பாடியுள்ளார்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அப்டேட் விஜய் இரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.