Google பாஸ்வேர்ட் மெனேஜரில் தற்போது புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பயனர்கள் தங்கள் குடும்பக் குழு உறுப்பினர்களுடன் பாஸ்வேர்ட்டை பகிர அனுமதிக்கிறது.
இந்த அம்சம் தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்த பயனர் முதலில் Google பாஸ்வேர்ட் மெனேஜரில் family group ஐ ஆரம்பிக்க வேண்டும். அதில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
யாருடன் பாஸ்வேர்ட் பகிர வேண்டுமோ அவர்களை இதில் Add செய்ய வேண்டும். இந்த குரூப்-இல் உள்ளவர்களுக்கு மட்டுமே, பாஸ்வேர்ட் பகிரப்படும். Google Account வைத்திருப்பவர்களுக்கு அல்ல. Google பாஸ்வேர்ட் மெனேஜரில் Account உள்ளவர்கள் மற்றும் குரூப்பில் உள்ளவர்களுக்கு பாஸ்வேர்ட் பகிரப்படும்.
இந்த வசதி தற்போது மொபைல் வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்க்டொப் வெர்ஷனில் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.