தங்களின் வயதைப் பொருட்படுத்தாமல் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அதிகமானவர்கள் பலவாறான சாதனைகளைச் செய்துள்ளனர். காரணம்,அவர்கள் “வயது என்பது ஒரு எண்” என நினைப்பவர்கள்!
இதனடிப்படையில் 98 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் தனது வயதை கருத்திற்கொள்ளாது, ஜிம்னாஸ்டிக் செய்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளார்.
இவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளன.
98 வயது மூதாட்டியின் சுறுசுறுப்பை நேரில் பார்த்தவர்களும் காணொளியில் கண்டுகளித்தவர்களும் மிகுந்த ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஜேர்மனியைச் சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 2012ஆம் ஆண்டில், உலகின் மிக வயதான ஜிம்னாஸ்டிக் வீரர் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்ததுடன்,அப்போது இவருக்கு 86 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச்சாதனையைப் படைத்து தற்போது 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர் தற்போதும் ஜிம்னாஸ்டிக் செய்வதற்கேற்ப உறுதியாக செயல்பட்டு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளதுடன், தான் தினமும் உடற்பயிற்சி செய்து, காய்கறிகளை உட்கொள்வதே தனது வெற்றிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் “என் முகம் பழையதாக இருக்கலாம், ஆனால் என் இதயம் இன்னும் புதியதாக,மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறது” என்றும் அந்த மூதாட்டி கூறியுள்ளார்.