இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் அசத்தலான ஆட்டத்திறமையை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
முதல் சுற்றிலிருந்து வெளியேறிய எனக்கு, இதுவே கடைசிப் போட்டியாகக் கூட இருக்கலாம் என்று கூறி, அவரது அனைத்து இரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றார் ரபேல் நடால்.
கிட்டத்தட்ட 14 முறை சம்பியன் பட்டம் வென்ற நடால், முதல் சுற்றிலேயே வெளியேறியது,அவரது இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆரம்பத்தில் ரபேல் நடால், பிரெஞ்சு ஓபன் போட்டி தொடர்பில்,தன்னுடைய 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் நிறைவுசெய்யப்போகின்றார் என பல செய்திகள் வெளியாகியிருந்தன.
ரபேல் நடால் 2005 ஆம் ஆண்டில் ரோலண்ட் கரோசில், தனது முதல் சம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.