நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் ஆரம்பகட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இத்திரைப்படத்திற்காக நடிகர் அஜித் தனது எடையை குறைத்துள்ளதாகவும் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.குறித்த புகைப்படங்களில், நடிகர் அஜித்குமார் கட்டம் போட்ட சட்டையில் சிரித்த முகத்துடன் இருக்கிறார்.
இந்தப் புகைப்படங்களை அஜித்குமாரின் இரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.