மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அடிக்கடி வழங்கி வருகின்றது.
தற்போது, வட்ஸ்அப்பில் AI மூலம் படங்களை உருவாக்கி அதை Profile போட்டோவாக வைக்கும் வகையில், புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ப்ரைவசி-ஐ அதிகப்படுத்தும் வகையிலும், தங்கள் படங்களை Profile போட்டோவாக வைக்க விரும்பாதவர்களுக்கும் இந்த அம்சம் உதவியாக இருக்கும். செட்டிங்ஸ் ஒப்ஷன் பகுதிக்கு சென்று பென்சில் லைக் எடிட் ஐ பயன்படுத்தி இதனை உருவாக்கலாம்.
AI மூலம் உருவாக்கப்படும் படங்கள் கிட்டத்தட்ட ஸ்டிக்கர்ஸ் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உருவாக்க, உங்களுக்கு படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை Describe செய்து உருவாக்கும் வகையில் புதிய AI அம்சம் கொண்டு வரப்படுகின்றது.
இது தற்போது பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.