இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட முஹம்மது அயான் யூனிஸ் என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் டுபாயில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில், தனது தந்தையுடன் டுபாயில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தச் சிறுவன், தான் பயணித்த பாதையின் அருகில் இருந்து விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றினைக் கண்டெடுத்துள்ளார்.
குறித்த கைக்கடிகாரத்தினைக் கண்டெடுத்த இந்த சிறுவன், அதனை தான் எடுத்துக்கொள்ளாமல் தனது தந்தையின் உதவியுடன் அருகில் இருந்த காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கைக்கடிகாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருடையது என்றும் இது தொடர்பில் அந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்ததாகவும் அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்திருந்ததுடன், குறித்த சிறுவனின் உதவியுடன் அந்தக் கைக்கடிகாரத்தை உரியவரிடம் சேர்த்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த சிறுவனின் இந்தச் செயலைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக,அந்தச் சிறுவனுக்கு டுபாய் நாட்டு காவல்துறையினர் விருது வழங்கி கெளரவித்திருந்ததுடன், அவரது இந்தச் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.