குறித்த திரைப்படம்,நடிகர் சூர்யாவின் 44 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தத் திரைப்படத்திற்கு,சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில்,இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் 2ஆம் திகதி அந்தமானில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும்,சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இத்திரைப்படம் தொடர்பான புதிய அறிவிப்புக்களை இரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில்,படக்குழுவானது சூர்யா 44 திரைப்படம் தொடர்பான புதிய அறிவிப்பொன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
தற்காலிகமாக சூர்யா 44 எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தில் நடிக்கும், நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்பான விபரங்கள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.