லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த, விஷ்ணு எடாவன் இயக்கத்தில் நடிகர் கவின் மற்றும் நயன்தாரா ஆகியோர் புதிய திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனைத்தொடர்ந்து, இத்திரைப்படக்குழு குறித்த இந்தத் திரைப்படம் தொடர்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, இத்திரைப்படத்தில், நடிகர் கவினிற்கு ஜோடியாக நயன்தாரா தான் நடிக்கப்போகின்றார் என்று படக்குழு உத்தியோகபூர்வமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் இவர்கள் ஜோடியாக நடிப்பது அவ்வளவு பொருத்தமானதாக இருக்காது என்ற விமர்சனம் இரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கின்றது.
ஒரு இளைஞர் தன்னை விட வயது அதிகமான பெண்ணைக் காதலிப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி எதிர்கொள்கின்றார் என்பதை உள்ளடக்கிய விடயம் தான், இந்தத் திரைப்படத்தின் கதை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தத் திரைப்படத்தின் கதைப்படி பார்த்தால், கவின் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஜோடியாக நடிப்பது, சிலநேரங்களில் பொருத்தமாக இருக்கலாம் என இரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.