கோடை காலத்தில் நமக்கு ஏற்படும் சருமப் பிரச்சினைகள் முதல், உடல் எடைக் குறைப்பு வரை, லிச்சிப் பழமானது பெரும் பங்கு வகிக்கின்றது.
இந்தப் பழம் நீர்ச்சத்து நிறைந்தது. கோடை காலத்தில் அதிக தண்ணீர்த் தாகம் எடுக்கும் போது லிச்சி ஜூஸ் பருகுவது, உடல் நீரேற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தப் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுகின்றார்கள்.தனித்துவமான மற்றும் வலுவான இனிப்புச் சுவையைக் கொண்டிருப்பதால், ஐஸ்கிறீம்,பழச்சாறு போன்றவற்றில் இந்தப் பழத்தைப் பயன்படுத்துகின்றார்கள்.
உணவு உட்கொண்ட பின்பு இந்த லிச்சிப் பழத்தைச் சாப்பிட்டால், செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. காரணம் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது.
இந்தப் பழத்தில் விற்றமின் E அதிகமுள்ளதால், இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி,பளபளப்பைக் கொடுக்க உதவுகின்றது.
மேலும்,லிச்சியில் உள்ள தாமிரம் எனும் அமிலமானது, கூந்தல் வளர்ச்சியை ஏற்படுத்தவும் உதவுகின்றது.
உடலுக்கு எவ்வித நோயும் வராமல் தடுக்க,லிச்சிப் பழத்தை உட்கொண்டால்,நோய் எதிர்ப்புச் சக்தி நமக்கு அதிகரிப்பதைக் காணலாம். இந்தப்பழத்தில் விற்றமின் C அதிகளவில் உள்ளதால், வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கவும் உதவுகின்றது.
தினமும் ஒரு லிச்சிப் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி ,இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
உடற்கூறுகளை ஆரோக்கியமாக வைப்பதில் லிச்சிப் பழமானது முதலிடத்தில் உள்ளது.எனவே இயற்கையாகக் கிடைக்கும் லிச்சிப்பழத்தை உட்கொண்டு,இதனால் கிடைக்கும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.