இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.மேலும் ஊர்வசி, அஜய் ஜோஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மக்களுக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையை வைத்து, எப்படியெல்லாம் அரசியல் செய்கின்றனர் என்பதை,இந்தத் திரைப்படத்தில் நகைச்சுவை கலந்து காண்பித்திருப்பார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்தநிலையில் ஆர்.ஜே.பாலாஜி தற்போது 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான Script பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 'மூக்குத்தி அம்மன்' பாகம் இரண்டில் நயன்தாராவிற்குப் பதிலாக, திரிஷா நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகை திரிஷா தற்போது 'விடாமுயற்சி', 'Thug Life' போன்ற திரைப்படங்களில் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.