அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி, இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் சூரியின் கருடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிட்ட இரசிகர்கள், தாங்கள் எதிர்பார்த்தது போலவே ''கருடன்'' திரைப்படம் சிறப்பாக உள்ளதென சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.