நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது. அது உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.
உணவு சமைக்கும் போது சுவையை அதிகரிக்கவும், உடல் நலம் மேம்படவும் சில பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன.அப்படியான ஒரு உணவுப் பொருள் தான் பூண்டு. பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் நாள்தோறும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக, பசும்பாலில் பூண்டைக் கொதிக்க வைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்தால் இரத்த அழுத்தம் குறையும்.
சில பூண்டுப் பற்களை நன்றாக இடித்து ஒரு தேக்கரண்டி அளவு வாயில் போட்டு,சிறிது வெண்ணீர் அருந்துவதால் வாயுக் கோளாறுகள்,அஜீரணம் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
தோலுரித்த பூண்டை 10 நாட்கள் தேனில் ஊற வைத்து,வெறும் வயிற்றில் சாப்பிடுவதால்,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.
சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பாதிப்புக்களிலிருந்து விடுதலை பெற,பூண்டைப் பச்சையாக சாப்பிடலாம்.
பூண்டை, தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றுடன் கலந்து,கூந்தலுக்குப் பயன்படுத்தினால்,நல்ல பலன் கிடைக்கும்.
இது முடி உதிர்வு,பொடுகு ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்கின்றது.
நம் உடலில் உள்ள சில முக்கியமான உடற் செயற்பாட்டை மேம்படுத்த, பூண்டு உதவுகின்றது.
எனவே நமது அன்றாட உணவில் பூண்டைச் சேர்த்து உட்கொண்டு,ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.