குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி “சின்னக் குஷ்பு”என தமிழ் நாட்டில் இரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா.
2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சேட்டை', 'வேலாயுதம்', 'தீயா வேலை செய்யனும் குமாரு', 'சிங்கம் 2', 'பிரியாணி', 'மான் கராத்தே', 'அரண்மனை', 'அரண்மனை 2', 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில், திருமணத்திற்குப் பின்பு இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில், நடிகை ஹன்சிகா 'காந்தாரி' என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மெட்ரோ ஷிரிஷ் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கான இசையை முத்து கணேஷ் வழங்கியுள்ளார்.
Horror கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் First Look போஸ்டர் கடந்த ஆண்டு வெளிவந்திருந்தது. இதில் நடிகை ஹன்சிகா மோத்வானியின் ஆக்ரோஷமான தோற்றம் இரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்த நிலையில், இத்திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.