சுமார் 527 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்துள்ள ரிஷப் பண்ட் தற்போது இடம்பெறவுள்ள உலகக்கிண்ண 20 ற்கு 20 தொடரில் விளையாடவுள்ள அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் காப்பாளராகவும் துடுப்பாட்ட வீரராகவும் மிகச் சிறப்பாக செயற்பட்டு வந்த ரிஷப் பண்ட் , கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பயணித்த கார் விபத்திற்குள்ளானதால், பலத்த காயங்களுக்குள்ளாகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தான் மீண்டும் அணியில் இடம்பிடிப்பதற்காக தனது உடற்தகுதியினை நிரூபிக்க, சுமார் ஒரு வருடம், சிகிச்சை மற்றும் முறையான பயிற்சி என்பனவற்றை எடுத்துக்கொண்ட ரிஷப் பண்ட் , அண்மையில் நடந்து முடிந்த IPL தொடரில் டெல்லி அணியின் தலைவராக செயற்பட்டு 13 போட்டிகளில் 446 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரிஷப் பண்ட், அணியில் மீண்டும் உள்வாங்கப்பட்டது மகிழ்ச்சி. இங்கிருந்து சிறந்த முறையில் எனது பயணம் இருக்கும் என நம்புகிறேன். சக அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்து நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.