இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை,நடிகர் சூர்யாவின் 44 ஆவது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.இந்தப் படத்தில் சூர்யாவுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்டவர்கள் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள சூழலில் படத்தின் வில்லனாக உறியடி படம் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜயகுமார் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தத் திரைப்படத்தின் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளாதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன் 'சூர்யா 44' திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமாகவுள்ளதாகவும், இதற்காக படக்குழுவினர் அந்தமான் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.