‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்டன் மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட சுமார் 10 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகின்ற திரைப்படம் ‘வடக்கன்’.
இத்திரைப்படத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பல புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர். எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ள ‘வடக்கன்’ திரைப்படத்திற்கு ரமேஷ் வைத்யா பாடல்களை எழுதியுள்ளார்.
அண்மையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அத்துடன் கடந்த மே மாதம் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனாலும் , ‘வடக்கன்’ திரைப்படத்தின் பெயரை தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், இத்திரைப்படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்தத் திரைப்படத்திற்கு ‘ரயில்’ என புதிய பெயர் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘ரயில்’ என்ற பெயரோடு இத்திரைப்படம், திரையிடப்படும் திகதி வெகு விரைவில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.