இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்த 2.5 கிலோகிராம் முடியை, சத்திர சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.
குறித்த பெண் தான் கர்ப்பமுற்றிருந்த காலப்பகுதியில் தலை முடியை உண்ணும் பழக்கத்திற்கு ஆளாகியிருந்ததாக தெரிவித்துள்ளதுடன், தற்போது இவரது வயிற்றில் இருந்து சத்திர சிகிச்சையின் மூலம் 2.5 கிலோகிராம் தலைமுடி அகற்றப்பட்டுள்ளது.
குழந்தையினைப் பிரசவித்ததன் பின்னர் முடிகளை உண்ணும் பழக்கத்தினைக் கைவிட்டுள்ள குறித்த பெண் அண்மையில் கடுமையான வயிற்று வலியினால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து வைத்தியசாலைக்குச் சென்ற குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது இரைப்பை முழுவதும் முடி இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்து, அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, 2.5 கிலோகிராம் நிறையுடைய முடி அகற்றப்பட்டுள்ளது.தற்போது குறித்த பெண் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.