AI Call Scanner என்ற புதுமையான அம்சம், மனித குரலைப் போல செயற்கை நுண்ணறிவு (AI) ஐ பயன்படுத்தி வரும் போலி அழைப்புகளை கண்டறிய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை அடையாளம் காணல்:
ஒரு அழைப்பு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றும்போது, Truecaller அப்ளிகேஷனில் உள்ள எளிய டெப்பைப் பயன்படுத்தி, AI Call ஸ்கேனரை செயற்படுத்தலாம்.
குறுகிய மாதிரியை பதிவு செய்தல்:
அழைப்பாளரின் குரலின் ஒரு சிறிய பகுதியை ஸ்கேனர் சிறிது நேரம் பதிவு செய்கிறது.Truecaller இன் மேம்படுத்தப்பட்ட AI மொடல், குரல் மாதிரியை பகுப்பாய்வு செய்து, உண்மையான மனித பேச்சுக்கும் AI உருவாக்கிய குரலுக்கும் உள்ள தனித்துவமான பண்புகளை அடையாளம் காண்கிறது.
AI உருவாக்கிய குரல்களை அடையாளம் காண்பதன் மூலம், பயனர்கள் மிகவும் கவனமாக இருந்து, ஏமாற்றுபவர்களின் பிடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம். Truecaller இன் AI Call ஸ்கேனர் அம்சம் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றது.
மேலும் இந்த அம்சம், Truecaller இன் பிரீமியம் சந்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.