டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என்று, ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களையும்,பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் கடுமையாகத் திட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல்,பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டித் தொடர்கள் நடத்தப்படும் விதமானது,முறையானதாகவும் மற்றும் சரியானதாகவும் இருப்பதாக தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோகோ கௌஃப் கூறியிருப்பதாவது,முன்னதாக இடம்பெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிவடைந்தது. இது உண்மையில் உடல்நலத்திற்கு நல்லதல்ல! நீங்கள் பல சமயங்களில் அதிகாலை 3 மணிக்கு போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பின்பு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்.
அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும். இந்தப் பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.இது உடல்நலத்திற்கு நல்லதல்ல என்றே நினைக்கிறேன்.
போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது,டென்னிஸ் போட்டி ஏற்பாட்டாளர்களை கோகோ கௌஃப் திட்டிய விடயம் வைரலாகி வருவது மட்டுமல்லாது,ஒரு தரப்பினர் கோகோ கௌஃப்ற்கு ஆதரவாகவும்,சிலர் இந்தக்கருத்தை மறுக்கும் விதமாகவும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றார்கள்.