இன்ஸ்டாகிராம் 2010-இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான அக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தைப் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய இளைஞர்கள் அதிகம் உலா வருவது இன்ஸ்டாவில் தான். அதனைக் கருத்திற் கொண்டு, பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் லிமிட் இன்ட்ரேக்ஷன்ஸ் ( Limit Interactions ) என்ற அம்சத்தை மெட்டா வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் ட்ரோல் மற்றும் Bulliying போன்றவற்றை பயனர்கள் எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட பயனர்களிடத்தில் இருந்து வரும் DM (Direct Message), போஸ்டுக்கான கமெண்டுகள், டெக்ஸ் போன்ற அனுமதிகள் இருக்காது. இதனைத் தற்காலிகமாக மட்டுமே மேற்கொள்ள முடியும்.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் இன்டரேக்ட் செய்யலாம். மற்ற பயனர்களிடத்தில் இருந்து மெசேஜ், கமெண்ட், டேக் போன்றவற்றை பெறாமல் இருக்கலாம்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தின் செட்டிங்ஸ் அண்ட் அக்டிவிட்டிக்குச் சென்று லிமிட் இன்டரேக்ஷன்ஸை தெரிவு செய்தால், இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.