நாம் அன்றாடம் வீடுகளில் சமைத்துச் சாப்பிடக்கூடிய கீரைகளில் மிக முக்கியமானது பருப்புக்கீரை. சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும்.
இந்தக்கீரையில் அதிக அளவில் விற்றமின் A , C மற்றும் B ஆகிய சத்துக்கள் உள்ளன. அத்துடன் மீன்களில் காணப்படும் ஒமேகா 3 இந்தக் கீரையில் காணப்படுகின்றது.
தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல அரைத்து நெற்றிக்குப் பற்று போட்டு வந்தால், தலைவலி விரைவாகத் தீரும். மேலும் இரைப்பையில் அதிகமாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் அஜீரணக் கோளாறுகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள பருப்புக்கீரையை உண்ணலாம்.
இந்த பருப்புக்கீரையை உட்கொண்டால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
பருப்புக் கீரையில் கல்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால் எமது எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.
எனவே நமது அன்றாட உணவில் இந்த பருப்புக்கீரையைச் சேர்த்து உட்கொண்டு, ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்வோம்.