'கூலி' திரைப்படத்தின் முதலாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மிக விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததன் பின்னர், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் 'ஜெயிலர் 2' திரைப்படம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இந்த அப்டேட்டிற்குப் பின்பு, இந்த இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களையும் ஒரே திரையில் பார்ப்பதற்கு, தமிழ் சினிமா இரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.