இன்றைய காலத்தில் அனைவருமே தங்களுடைய அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளார்கள்.தங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, சருமத்திற்கு பல பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
நம்மைச் சுற்றி இருக்கும் சூழ்நிலை, காற்று,மாசு ஆகியவை நம் சருமத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றன.காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் நமது சருமத்தில் படிந்து பல சரும அழற்ச்சிகளை உண்டாக்குகின்றன.
நம்முடைய வீட்டிலேயே இலகுவாக,சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே,சருமத்தை அழகு படுத்திக்கொள்ள முடியும்.அதனை எப்படிச் செய்வது? அதற்கு தேவையான பொருட்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.
சருமத்தில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்க, அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.
கோப்பித்தூளுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து சருமத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்வதால்,சருமத்தில் உள்ள தோல் மிருதுவாக இருக்கும்.
வெள்ளரிச் சாறுடன் தக்காளிச் சாறு சிறிதளவு சேர்த்து சருமத்தில் தடவி 10 நிமிடம் வைக்க வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவினால்,சருமம் மென்மையாகவும் புத்துணர்வுடனும் மாறிவிடும்.
உருளைக்கிழங்குச் சாற்றுடன் சிறிதளவு தயிர் சேர்த்து கலந்து,சருமத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால்,சருமத்தில் கிருமித் தொற்று பரவுவது குறையும்.
கறுப்பு சீனியுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து ஸ்க்ரப் தயாரித்துக்கொள்ள வேண்டும்.பின்பு சருமத்தில் தடவி ,நன்கு ஸ்க்ரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளை வாரத்திற்கு இரண்டு முறையேனும் தொடர்ந்து செய்து வந்தால்,பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.