இவர் இறுதியாக, இயக்குநர் ராஜ மௌலி இயக்கத்தில் நடித்த சலார் திரைப்படம் எதிர்பார்த்த அளவு இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்திய மதிப்பில் 600 கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்ச்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தின், முதலாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்தநிலையில், இத்திரைப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இந்தியாவில் இடம்பெற்ற மக்களவைத் தேர்தல் காரணமாக இத்திரைப்படம் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ‘கல்கி 2898 AD’ திரைப்படம் இம்மாதம் 27 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது!
இந்த நிலையில், இத்திரைப்படம் குறித்த இன்னுமொரு மிக முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் Trailer இம்மாதம் 10 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த விடயம் தமிழ் சினிமா இரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.