இதனால் பல பிரபலங்கள் தங்களுடைய,மிக முக்கியமான இரகசியமான விடயங்களை,எதுவித காரணத்தைக் கொண்டும் சமூக வலைத்தளங்கள் மூலமாக மேற்கொள்வதில்லை.
இருந்தாலும் பலர்,மிக முக்கியமான சினிமா பிரபலங்களுடைய பெயர்களை வைத்து, பலவிதமான சமூக வலைத்தளக் கணக்குகளை திறக்கின்றார்கள்.அதன் பின்பு பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
அண்மையில்,நடிகர் அஜித்குமாரின் மனைவியான ஷாலினி, தன்னுடைய இன்ஸ்ட்டாத் தளத்தில் "அனைவருக்குமான வேண்டுகோள்! குறித்த இந்தப் பக்கம் என்னுடைய எக்ஸ் தளமல்ல.தயவு செய்து யாரும் இதனை நான் என்று நம்பவேண்டாம்.அதே நேரத்தில் பின்தொடரவும் வேண்டாம்" நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலரும்,ஷாலினியின் பெயரில் திறக்கப்பட குறித்த எக்ஸ் தளக் கணக்கினை unfollow செய்து வருகின்றார்கள்.