உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், நீங்கள் நிச்சயமாக செய்திகளை அனுப்ப WhatsApp ஐ பயன்படுத்துவீர்கள். பிரதான மெசேஜ் செயலியாக இருக்கும் அதில் Internet இருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், இணையம் இல்லாமல் கூட WhatsApp செய்திகளை அனுப்ப முடியும். பல WhatsApp பயனர்களுக்கு இந்த அம்சம் பற்றித் தெரியாது.
Meta CEO Mark Zuckerberg கடந்த ஆண்டு Proxy அம்சத்தை அறிமுகப்படுத்தினார். இந்த அம்சத்தின் மூலம், இணையம் இல்லாவிட்டாலும் வட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம். இதனைச் செய்ய, உங்கள் தொலைபேசியில் ப்ராக்ஸி அம்சத்தை இயக்க வேண்டும்.
WhatsApp சமீபத்திய பதிப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எப்படி இந்த அம்சத்தை செயற்படுத்துவது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம்.
- இப்போது நீங்கள் WhatsApp செயலியின் வலது பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.
- பின்பு, செட்டிங்ஸ்ஸுக்குச் செல்லவும்.
- இங்கே நீங்கள் Storage and Data பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது நீங்கள் Proxy விருப்பத்தைத் தட்ட வேண்டும்.
- இதற்குப் பின்பு, Proxy முகவரியை உள்ளிட்டு அதைக் கிளிக் செய்யவும்.
- Proxy முகவரி சேமிக்கப்பட்ட பின்பு, ஒரு பச்சைக் குறி தோன்றும். அதாவது Proxy முகவரி சேர்க்கப்பட்டுள்ளது.
Proxy நெட்வொர்க்கில், நீங்கள் சமூக ஊடகத் தளங்கள் அல்லது பிரவுசர்களின் உதவியுடன் இணையம் இல்லாமல் செய்தி அனுப்பலாம் அல்லது அழைக்கலாம். இந்த அம்சம் பயனர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானது என்பதை மெட்டா உறுதிப்படுத்தியுள்ளது.