முருங்கையின் அனைத்து பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. தினமும் நமது அன்றாட உணவில் சேர்க்கும் முருங்கைக்கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன.
முருங்கைப் பூவுடன் பசுப்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை, மாலை என இருவேளையும் அருந்தி வந்தால்,கண்களில் உள்ள ஈரப்பசை அதிகரித்து கண்பார்வை அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் காரணமாக உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி தூளாக்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தூளுடன் நீரைக் கலந்து பருகினால் பித்தம் சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
அதிக வேலைப்பளு, மன அழுத்தம் என்பவற்றால் சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்புத் தளர்ச்சி உண்டாகும். அவ்வாறானவர்கள் முருங்கைப் பூவை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிகள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
முருங்கைப் பூவை இரவு நேரத்தில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அதன் சாற்றைப் பிழிந்து 2 துளிகள் கண்களில் விட கண் வலி விரைவாக நீங்கும். அத்துடன் கை, கால்களில் ஏற்படும் வீக்கம் மறைய முருங்கைப் பூவை அவித்து கை, கால்களில் பூசி நன்கு காய்ந்த பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதனால் கை, கால்களில் ஏற்படும் வீக்கம் நீங்கும்.