பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், விடிவி கணேஷ், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்திரி என முன்னணி நட்சத்திரப் பட்டாளத்தையே இந்தத் திரைப்படத்தில் களமிறக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
சென்னை , கேரளா, ஐதராபாத், மாஸ்க்கோ,இலங்கை என படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சாக நடந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் 80-களில் வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் நடிகர் மோகன்.
பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்து கொடிகட்டிப் பறந்த நடிகர் மோகனை, தற்போது GOAT திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு மாஸ் என்ட்ரி கொடுக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.
அந்தவகையில், GOAT திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் மோகன் இலங்கையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் GOAT திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதாவது “இப்போது GOAT படப்பிடிப்பிற்காக நான் மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளேன்.இந்தப் படம் நிச்சயம் மிகச் சிறந்த படமாக இருக்கும், இந்தப் படம் விஜய் இரசிகர்கள் அனைவருக்குமே சிறந்த விருந்தாக இருக்கப்போகின்றது.
மேலும் இந்தப் படம் குறித்து அதிகமாகப் பேச முடியாது என்றும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள சூழலில், அதைத் தொடர்ந்து தயாரிப்புத் தரப்பின் ஒப்புதலுடன் திரைப்படம் குறித்து அதிகமாகப் பகிர்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் மோகனின் இந்த நேர்காணல் GOAT திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள் விஜய் இரசிகர்கள்.