தமிழ் சினிமாவில் புரட்சிகரமான திரைப்படங்களை இயக்கி, தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். அஜித்தின் 'தீனா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர் முருகதாஸ், தன் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
அதன்பின்பு 'தர்பார்' திரைப்படத்தின் தோல்விக்குப் பின்னர் மூன்று ஆண்டுகள் எந்தத் திரைப்படமும் இயக்காமல் இருந்த நிலையில், இப்போது ஏ.ஆர் முருகதாஸ்,சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த திரைப்படத்தைத் தொடங்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை நிறைவு செய்த பின்பு, ஏ.ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து பொலிவுட் திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் ஏற்கனவே இவர் அமீர்கானை வைத்து 'கஜினி' திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சல்மான்கானோடு இணைந்து 'சிக்கந்தர்' என்ற திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். இந்தத் திரைப்படம் இந்திய மதிப்பில் 400 கோடி ரூபா பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இத்திரைப்படத்தின் பெரும்பகுதியை படமாக்க, முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். இதேவேளை இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க கரீனா கபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.