இத்திரைப்படத்தில் ரகுமான், கிரித்திக் மோகன், பாலசந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் First Look Poster மற்றும் Trailer ஆகியவை ஏற்கனவே வெளியாகி, இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் இடம்பெற்ற நீட் தேர்வை மையமாகக்கொண்டதாக இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், தமிழ் நாட்டில் இந்தத் திரைப்படத்திற்கு, அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் இத்திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அத்துடன் தமிழ் சினிமா இரசிகர்கள் 'அஞ்சாமை' திரைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.