தமிழ்த் திரையுலகில் பிரபல இயக்குநர்களான பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சசிகுமார்.அதற்குப் பின்னர், சுப்பிரமணியபுரம் திரைப்படத்தைத் தானே இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருந்தா
இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கு வெற்றிகரமான ஆரம்பத்தைக் கொடுத்தது.
அதனைத் தொடந்து நாடோடிகள், ஈசன், சுந்தரபாண்டியன், கொடி வீரன் உட்பட, பல திரைப்படங்களில் நடித்துள்ளார் சசிகுமார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்திலும் சசிகுமாரின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
இந்நிலையில், சசிகுமார் திடீரென முற்றிலும் புதிய தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களைப் பார்த்த இரசிகர்கள் இது சசிகுமாரின் அடுத்த படத்துக்கான தோற்றமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.