நடிகை சமந்தா, தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கிடையில் ஏற்பட்ட சில கருத்து முரண்பாடுகளின் காரணமாக விவாகரத்துப் பெற்று பிரிந்து, தற்போது தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகின்றார்
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயின் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்தார். தற்போது சிகிச்சைக்கு பின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதனால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் நடிகை சமந்தா, தற்போது Red Light என்ற Therapy சிகிச்சையினை மேற்கொண்டு வருகின்றார். இதன் மூலம் சருமத்தில் உள்ள டிசுக்களை புதுப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த சிகிச்சை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் தனது செல்லப்பிராணியான பூனையுடன் சேர்ந்து, சமந்தா எடுத்துக்கொண்ட காணொளியினை அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.