வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கருடன்'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரியுடன், உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
மே 31 ஆம் திகதி வெளியான இத்திரைப்படம் கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படம் , வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.மேலும் சூரியின் நடிப்பினை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், இதுவரை 2 மடங்கு வசூலை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 'கருடன்' திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் 9 நாட்களில் இத்திரைப்படம் இந்திய மதிப்பில் 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.