பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அதனைத்தொடர்ந்து கொடி திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் இறுதியாக தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் அவர் இயக்குநர் A.R. ஜீவா இயக்கத்தில் 'Lock Down' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்திற்கு N. R. ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
'Lock Down' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் teaser வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளமையினால், தமிழ் சினிமா இரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர்.