இளநீர் பாயாசமானது,உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.பலருக்கு இளநீர் பாயாசம் எவ்வாறு செய்வது என்பது தெரியாது.இன்று இந்தப்பதிவில் இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்!
இளநீர் பாயாசம் செய்யத் தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள் :
இளநீர் வழுக்கை – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
மில்க்மெய்ட் – மூன்று தேக்கரண்டி
சுண்டக் காச்சிய பால் – ஒரு கப்
தேங்காய்ப் பால் – ஒரு கப்
ஏலக்காய்த் தூள் – கால் தேக்கரண்டி
சீனி – ஒரு கப்
நெய் – மூன்று தேக்கரண்டி
கஜூ – 10
பிளம்ஸ் – 20
ஒரு பாத்திரத்தில் நன்கு குழைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட், பால், தேங்காய்ப் பால், ஏலக்காய்த் தூள், சீனி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியில் நெய் விட்டு,நெய் சூடாகியதும்,அதில் கஜூ, பிளம்ஸ் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அந்தப் பாத்திரத்தில் கொட்டி கிளறிப் பரிமாறவும்.
இப்போது வெறும் இரண்டே நிமிடத்தில் தயாராகக்கூடிய,ஆரோக்கியம் நிறைந்த இளநீர் பாயாசத்தை நீங்களும் இந்தப்பதிவில் உள்ளவாறு செய்து,உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்குக் கொடுத்து மகிழுங்கள்.