Sooriyan Gossip - பும்ராவின் பந்துவீச்சினை அடித்தாட முயன்றது தவறான முடிவு - கேரி கிறிஸ்டன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
459 Views
இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு,பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பேற்கின்றோம் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். குறித்த தோல்வி தொடர்பில் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் கேரி கிறிஸ்டன் பேசுகையில், “ ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். குறித்த நேரத்தில் தேவையில்லாமல் அடித்தாட முயன்று ஆட்டமிழந்தார்.
பும்ராவின் பந்துவீச்சினை அடித்தாட முயன்றது நிச்சயம் தவறான முடிவு தான். ஏனென்றால் ஆட்டம் அந்த நேரத்தில் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயும் நிலையில் இருந்தது.
பாகிஸ்தான் அணி பந்துக்குப் பந்து விளையாடினாலே வெற்றி என்ற நிலை தான் இருந்தது. அந்த நேரத்தில் தவறான முடிவை எடுத்து தோல்வியடைந்துள்ளோம்.
இதுபோன்ற தவறுகளைச் செய்யும் போது, அதன் விளைவுகளையும் நிச்சயம் சந்தித்தேயாக வேண்டும். ரிஸ்வான் மட்டுமல்லாமல்,அணியாகவே நாங்கள் சில தவறான முடிவுகளை முக்கியமான நேரத்தில் எடுத்ததாக நினைக்கின்றேன்” என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.