பொதுவாக நாம் அனைவரும் நம்மை அழகாகக் காட்டிக்கொள்ளத்தான் அதிகம் ஆசைப்படுவோம். அதற்காக வித விதமான இரசாயனம் கலந்த கிரீம்களை முகத்திற்கு நாம் பயன்படுத்துவோம்.
இவ்வாறு நாம் பயன்படுத்துவதனால். முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு முதிர்ச்சியானத் தோற்றத்திற்கு இளவயதில் ஆளாகிவிடுவோம்.எனவே இவ்வாறானப் பிரச்சினைகளிலிருந்து முகத்தைப் பாதுகாக்க சில இயற்கையான இலகு வழிமுறைகளைத் தெரிந்து கொள்வோம்.
நம்முடைய முகமானது மிகவும் மிருதுவான சருமத்தைக் கொண்டது.நாம் எப்பொழுதும் முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது சிறந்தது.அடிக்கடி நம் முகத்தில் கைகளை மற்றும் நகங்களை வைத்து அழுத்தக்கூடாது.
ஏனென்றால், நம் கைகளில் உள்ள அழுக்குகள், பக்டீரியா போன்ற கிருமிகளால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை வரக்கூடும்.
வெளியில் சென்று விட்டு கை கால்களைக் கழுவுவது போல, முகத்தையும் தண்ணீரால் கழுவுவது நல்லது.
தினமும் முகத்தை மசாஜ் செய்வது சிறந்தது.இவ்வாறு செய்வதனால் இரத்த ஓட்டம் சீராகி முகம் பொலிவு பெறும்.
தேன்,மஞ்சள்,கற்றாழை,தயிர்,எலுமிச்சைச்சாறு,தக்காளி,கரட்,பீட்ருட், பால்,பயறு கடலைமா போன்ற முகத்திற்கு பாதிப்பு தராத சில இயற்கையான பொருட்களைக் கொண்டு முகத்திற்கு face pack போட்டுக்கொள்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய செல்கள் உருவாகும். இதனால் முகம் பொலிவாக இருக்கும்.
வீட்டில் சமையல் செய்யும் பெண்கள் காய்கள் மற்றும் பழங்கள் நறுக்கும் போது அதில் உள்ள சாறுகளைத் தனியாக எடுத்து அதனை முகத்தில் பூசி பின் காய்ந்தவுடன், முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முகம் பொலிவு பெறும்.
எந்தவொரு face packஐ முகத்திற்குப் பூசுவதாக இருந்தாலும்,வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு சரும அலர்ஜி காணப்படும்.அவ்வாறானவர்கள் முதலில்,உங்கள் கைகளில் பூசிப் பார்த்த பின்,முகத்திற்கு face packஐ பூசுங்கள்.
எனவே இவ்வாறான இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் முகத்தை என்றுமே இளமையாகவும் மற்றும் பொலிவாகவும் வைத்திருங்கள்.