'World Of Cricket ' என்ற புதிய ஸ்டிக்கர் அம்சத்தை வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்டிக்கர்களை நீங்கள் வட்ஸ்அப்பின் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.
2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்த நிகழ்வை இன்னும் மறக்க முடியாததாக மாற்ற, வட்ஸ்அப் புதிய ஸ்டிக்கர் packஐ 'World Of Cricket' அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய "World Of Cricket" ஸ்டிக்கர்களில் மொத்தம் 16 அனிமேஷன் ஸ்டிக்கர்கள் உள்ளன.
இது கிரிக்கெட் போட்டியின் வெவ்வேறு தருணங்களையும் கொண்டாட்டங்களையும் சித்தரிக்கிறது.
பதிவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்.
- பின்னர் குறித்த Chatting அல்லது Group Chattingக்குச் செல்லவும்.
- Chat பெட்டியைத் தட்டி, இமோஜி ஐகனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டிக்கர்கள் விருப்பத்திற்குச் சென்று, ஸ்டிக்கரைத் திறக்க '+' ஐகனைத் தட்டவும்.
- "World Of Cricket" என்ற விருப்பத்தைக் கண்டறிந்து, Download ஒப்சனை கிளிக் செய்யவும்.
இந்தப் படிமுறைகளைப் பின்பற்றி உங்களுக்குப் பிடித்தமான ஸ்டிக்கர்களை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.