இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள பிரபலமான தனியார் உடற்பயிற்சி நிலையம் ஒன்றினுள் நுழைந்த திருடனைப் பிடித்த அதன் உரிமையாளர், காவல்துறை அதிகாரிகள் வரும் வரை திருடனை treadmill இல் ஓட வைத்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
குறித்த அதிநவீன தனியார் உடற்பயிற்சி மையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்களின் மூலமாக திருடன் நுழைந்ததை அவதானித்த அதன் உரிமையாளர், திருடனை கையையும் களவுமாக பிடித்ததுடன், காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் அவரை சுமார் 2 மணிநேரம் குறித்த ஜிம்மில் இருந்த treadmill இல் ஓட வைத்துள்ளார். இதுதொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் நகைப்பிற்குள்ளாக்கியுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வீடொன்றில் திருடச் சென்ற திருடன் ஒருவன் குளிரூட்டியினை போட்டுக்கொண்டு உறங்கிய நிலையில் அவர் மறுநாள் காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.