எமது உடல் ஆரோக்கியத்தைப் பலமாக்கிக் கொள்வதற்கும்,உடல் அசதி மற்றும் காய்ச்சலை நொடியில் நீக்கக்கூடிய தனித்துவமான சிறப்பு வாய்ந்த மூலிகை கானா வாழை.
இந்த கானா வாழையில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் அதிகளவில் காணப்படுகின்றது. அத்துடன் உடலிலுள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கும் வல்லமையும் கானா வாழையில் அதிகம் உள்ளது.
கானா வாழையை உட்கொள்வதனால் சிறுநீரகப்பை,கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல் ஆகியவை பலமாகக் காணப்படும்.
தொழு நோய் உள்ளிட்ட பல சரும நோய்களுக்கு கானா வாழை சிறந்த தீர்வைத் தருகின்றது. அத்துடன் இதயத்தை பலமாக வைத்துக்கொள்வதற்கு கானா வாழை உதவுகின்றது.
பெண்களின் மார்பகத்தில் கட்டிகள், வீக்கம் போன்று ஏதாவது ஏற்பட்டுவிட்டால், கானா வாழையை அரைத்து பற்றுப் போட்டால்,விரைவில் இந்தப் பிரச்சினைகள் குணமாகும்.
பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கானா வாழையானது சிறந்த மருந்தாக கைகொடுக்கின்றது.
கானா வாழையின் சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலந்து முகப்பருக்களின் மேல் பூசி, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்துவர விரைவில் பருக்கள் மறைவதுடன், தழும்புகளும் நீங்கி சருமம் பொலிவாகக் காணப்படும்.
எனவே கானா வாழையை உணவில் சேர்த்து உட்கொண்டு,உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.