தனியுரிமைக் கொள்கைகளை மீறுபவர்கள் என இலட்சக்கணக்கான பயனர்களை வட்ஸ்அப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய மாதாந்த அறிக்கையில், சுமார் 71 இலட்சம் வட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாகக் கூறியிருக்கிறது.
வட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலைப் பராமரிக்க, பயனர் கணக்குகளை தடை செய்கிறது. இந்தக் கணக்குகளைத் தடை செய்வதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன.
1. ஸ்பேம், மோசடிகள், தவறான தகவல் மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புவது சேவை விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படும்.
3. வட்ஸ்அப் பயனர்களிடம் தவறாக நடந்துகொள்வது தொடர்பான முறைப்பாடுகள் வந்தால், அதன் அடிப்படையில் வட்ஸ்அப் நடவடிக்கை எடுக்கும்.
வட்ஸ்அப் கணக்கு உருவாக்கும்போதே சந்தேகத்திற்குரிய பதிவுகளைக் கண்டறிந்து தடுக்கும் அம்சங்களை வட்ஸ்அப் வைத்திருக்கிறது. இதன் மூலம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் வட்ஸ்அப்பில் கணக்குத் தொடங்கவே முடியாமல் தடுக்கப்படுகின்றனர்.
வட்ஸ்அப் தனது பயனர்களின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. பயனர்கள் புகாரளிக்கும் போது வட்ஸ்அப் அது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கின்றது.